மேலும் செய்திகள்
விக்கிரவாண்டி டோல்கேட்டில் லாரி மோதி ஊழியர் பலி
24-Aug-2024
திருத்தணி: திருத்தணி அடுத்த ருக்மணிபுரத்தை சேர்ந்தவர் கணேசன், 47. இவர், அதே பகுதியில் உள்ள மாந்தோப்பு ஒன்றில், கடந்த 10 ஆண்டுகளாக காவல்காரராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் உடல் சோர்வாக உள்ளதாக கூறியுள்ளார். உடன் வேலை பார்ப்பவர்கள் அவரை, பீரகுப்பம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்துள்ளனர். வீடு திரும்பிய கணேசன், வரும் வழியில் மயங்கி விழுந்து இறந்துள்ளார். இது குறித்து திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
24-Aug-2024