உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பிரியாணி கடைகளில் ஆய்வு ஊழியர்கள் சிக்கினர்

பிரியாணி கடைகளில் ஆய்வு ஊழியர்கள் சிக்கினர்

ஊத்துக்கோட்டை:தமிழக -- ஆந்திர எல்லையில் உள்ளது ஊத்துக்கோட்டை பேரூராட்சி. சுற்றியுள்ள, 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்கள் அத்தியாவசியத் தேவைக்கு ஊத்துக்கோட்டை சென்று வருகின்றனர்.இங்குள்ள ஹோட்டல் களில் உணவின் தரம் குறைவாக இருப்பதாகவும், கெட்டுப் போன பொருட்கள் விற்பனை செய்வதாகவும் மாவட்ட கலெக்டருக்கு தகவல் கிடைத்தது.கலெக்டர் பிரபுசங்கர் உத்தரவின்படி உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி கார்மேகம் தலைமையிலான குழுவினர் நேற்று ேஹாட்டல்கள், பிரியாணி கடைகள் என மொத்தம், ஐந்து கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.இதில் ஒரு பிரியாணி கடையில், பணியாற்றிய வட மாநில நபர்கள், ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் வைத்திருந்தது தெரிந்தது. இதைத் தொடர்ந்து அவர்கள் தங்கியிருந்த இரண்டு அறைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டன. புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், சம்பந்தப்பட்ட கடைக்கு 25,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை