உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் வரும் 3ல் தொழில் கடன் வழங்கும் விழா

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் வரும் 3ல் தொழில் கடன் வழங்கும் விழா

திருவள்ளூர்: திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்களில், வரும் செப்.3ல் தொழில்கடன் வழங்கும் விழா நடக்கிறது.திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் வாயிலாக, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் நிறுவவும், புதிய தொழிற்சாலை துவங்கவும் பல்வேறு சிறப்பு திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது. திருவள்ளூர் மாவட்ட கிளை அலுவலகமான, அம்பத்துார் தொழிற்பேட்டையில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில்கடன் விழா, கடந்த 19ல் துவங்கி, வரும் செப்.6 வரை நடக்கிறது.தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீதம் முதலீட்டு மானியமாக 1.50 கோடி ரூபாய் வரை வழங்கப்படும். இந்த முகாமில் சமர்ப்பிக்கப்படும் பொது கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை அளிக்கப்படும்.மேலும், செப்., 3ல் திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்களில், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் சார்பில் சிறப்பு கடன் வழங்கும் விழா நடக்கிறது. கூடுதல் தகவலுக்கு 99629 48002, 94443 96845, 94450 23485, 95516 70581 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ