உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பெங்களூரு நெடுஞ்சாலையில் வாகன நெரிசல் போக்குவரத்து போலீசார் நியமிக்க எதிர்பார்ப்பு

பெங்களூரு நெடுஞ்சாலையில் வாகன நெரிசல் போக்குவரத்து போலீசார் நியமிக்க எதிர்பார்ப்பு

கடம்பத்துர்:சென்னை - பெங்களூர் தேசிய அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையில் தினமும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் சென்று வருகின்றன.காலை 6:00 மணி முதல் 10:00 மணி வரை பீக்ஹவர்ஸ் நேரங்களில் தொழிற்சாலை, பள்ளி, கல்லுாரி வாகனங்கள் என அதிகமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் இந்த நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நேற்று காலை தண்டலம் கூட்டு சாலையில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலால் தண்டலம் - முதல் செட்டிபேடு வரை போக்குவரத்து பாதிக்கப்பட்ட நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்தி நின்றன. இதற்கு இப்பகுதியில் போக்குவரத்து போலீசார் இல்லாததே காரணம் என வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர். தகவலறிந்த ஸ்ரீபெரும்புதுார் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போக்குவரத்தை சீரமைத்தனர். இதையடுத்து ஒரு மணி நேரத்திற்கு பின் போக்குவரத்து சீரமைக்கப்பட்டது. இதனால் காலை நேரத்தில் பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ, மாணவியர் மற்றும் தொழிற்சாலைக்கு செல்லும் பணியாளர்கள் கடும் சிரமப்பட்டனர். வரும் காலங்களில் காலை, மாலை நேரங்களில் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து அரக்கோணம் செல்லும் தண்டலம் கூட்டு சாலை சந்திப்பு பகுதியில் போக்குவரத்து போலீசாரை நியமிக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் மற்றும் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ