உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தார்ப்பாய் மூடாமல் செல்லும் லாரிகளால் விபத்து அபாயம்

தார்ப்பாய் மூடாமல் செல்லும் லாரிகளால் விபத்து அபாயம்

திருமழிசை:சென்னை - பெங்களூரு தேசிய அதிவிரைவு நெடுஞ்சாலையில், தினமும், ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் சென்று வருகின்றன.தற்போது நடந்து வரும், சென்னை - பெங்களூரு தேசிய அதிவிரைவு நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளுக்கு, திருவள்ளூர், காஞ்சிபுரம், உட்பட பல இடங்களிலிருந்து சவுடு மணல் லாரிகள் வாயிலாக கொண்டு செல்லப்படுகிறது.இவ்வாறு கொண்டு செல்லப்படும் சவுடு மணல் தார்ப்பாய் போடாமல் செல்வதால் அவ்வழியே வாகனங்களில் செல்வோர் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.காவல்துறையினரும் தார்ப்பாய் போடாமல் செல்லும் லாரிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தார்ப்பாய் போடாமல் செல்லும் சவுடு மணல் லாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஒட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ