உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தனியார் பஸ் மோதி இருவர் பலி

தனியார் பஸ் மோதி இருவர் பலி

பூந்தமல்லி:மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர்கள் பாபி காஜ்டி, 30, டபாஸ், 24. இருவரும், பூந்தமல்லி அருகே செம்பரம்பாக்கம் கிராமத்தில் தங்கி, கட்டட வேலை செய்து வந்தனர். இருவரும் நேற்று முன்தினம் இரவு, சென்னை- - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், செம்பரம்பாக்கம் பகுதியில் சாலையை கடந்து சென்றனர். அப்போது, அவ்வழியே ஸ்ரீபெரும்புதுார் சிப்காட்டில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் இருந்து, ஊழியர்களை ஏற்றி சென்ற தனியார் பஸ், அவர்கள் மீது மோதியது. இதில் அடிபட்டு, இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். பேருந்து ஓட்டுநர் சங்கரை, 48, ஆவடி போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி