மேலும் செய்திகள்
பராமரிப்பின்றி ஒரகடம் மேம்பாலம்
27-Aug-2024
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் ராஜபத்மாபுரம் தொழுதாவூர் சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர். பழையனூர், ஜாகீர் மங்கலம், ராஜபத்மாபுரம் கிராமத்தை சேர்ந்த மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு சின்னம்மாபேட்டை, திருவாலங்காடு ரயில் நிலையம் செல்ல வேண்டி உள்ளது. அப்படி செல்வோர் தொழுதாவூர் - ராஜபத்மாபுரம் சாலையை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் இந்த சாலை ஜல்லி, மணல் கொண்டு மெட்டல் சாலையாக அமைக்கப்பட்டது. தற்போது மண் பெயர்ந்து ஜல்லிகள் வெளியில் தெரிந்து தற்போது கற்சாலையாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் இந்த வழியாக செல்ல முடியாத சூழல் உள்ளதாக புலம்புகின்றனர். போக்குவரத்து அதிகம் உள்ள இச்சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
27-Aug-2024