மேலும் செய்திகள்
மடுகூர் தரைப்பாலம் இணைப்பு சாலை சீரமைக்கப்படுமா?
24-Feb-2025
ஆர்.கே. பேட்டை:ஆர்.கே. பேட்டை ஒன்றியம், பாலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், ஆந்திர மாநிலம் சித்துார் மாவட்ட எல்லை அமைந்துள்ளது. இந்த எல்லையில் உள்ள மலைப்பகுதி சிறந்த நீர் பிடிப்பு பகுதியாக விளங்குகிறது. இங்கு இருந்து உருவாகும் ஓடைகளால் பாலாபுரம், அம்மையார் குப்பம் வழியாக பல்வேறு ஏரிகளுக்கு நீர்வரத்து உள்ளது. ஆந்திர மாநில நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்து வரும் மழைநீர் அம்மையார் குப்பம் அருகே ஓடையாக பாய்கிறது. இந்த ஓடையின் குறுக்காக செல்லும் தார் சாலையில் தரைப்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்தப் பாலத்தின் தடுப்புகள் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் பெய்த கனமழையில் உடைந்து சிதைந்தன. அதன் பின் மீண்டும் சீரமைக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக பாலாபுரம் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் தவித்து வருகின்றனர். இரவு நேரத்தில் பாலத்தை கடக்கும் வாகனங்கள், பாலத்தில் இருந்து விலகி ஓடையில் கவிழும் அபாய நிலையும் உள்ளது. வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கருதி பாலத்தில் தடுப்பு சுவர் ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
24-Feb-2025