உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கோரைப்புல் உறிஞ்சுவதால் வீணாகும் ஓடை நீர்

கோரைப்புல் உறிஞ்சுவதால் வீணாகும் ஓடை நீர்

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் அரிசந்திராபுரத்தில் துவங்கி சின்னம்மாபேட்டை, பழையனுார் வழியாக பாயும் ஓடை நீர் மஞ்சாகுப்பம் அருகே கொசஸ்தலையாற்றில் கலந்து பின் பூண்டி நீர்த்தேக்கம் செல்கிறது. இதன் நீளம் 14 கி.மீ., தூரமும், அகலம் 5 முதல் 60 மீட்டரும் உடையது.பூண்டி ஏரிக்கு மழைக்காலத்தில் ஓடை கால்வாய் வழியாக கிடைக்கும் நீரில் பழையனுார் ஓடை நீர் அதிகம்.இந்நிலையில் சின்னம்மாபேட்டை-- பழையனூர் வரையிலான ஓடை கால்வாயில் சுமார் 4 கி.மீ., துாரத்திற்கு கால்வாயை ஆக்கிரமித்து கோரைப்புல் முளைத்துள்ளது.கடந்த மாதம் பருவமழை பெய்த நிலையில், ஓடையில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. கடந்த காலங்களில் பருவமழை பெய்தாலே ஓடை கால்வாயில் ஆண்டு முழுதும் நீர் தேங்கி இருக்கும் ஆனால் தற்போது மழைக்காலம் முடியும் முன்னே வறண்டு காணப்படுகிறது.எனவே நீர் இருப்பை பாதுகாக்க ஓடை கால்வாய் பகுதியில் முளைத்துள்ள செடிகளை அகற்றி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்