உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கராத்தே போட்டியில் அசத்திய தமிழக வீரர்களுக்கு வரவேற்பு

கராத்தே போட்டியில் அசத்திய தமிழக வீரர்களுக்கு வரவேற்பு

சென்னை: இந்தியா, ஜப்பான், சீனா, தாய்லாந்து உள்ளிட்ட எட்டு நாடுகள் பங்கேற்ற, 20வது சர்வதேச கராத்தே போட்டி மலேஷியாவில் உள்ள ஈபோ மாகாணத்தில் நடந்தது.கடந்த 3 நாட்கள் நடந்த இப்போட்டியில், 'கட்டா, குமித்' ஆகிய பிரிவுகளில் 5 முதல் 70 வயது வரை உள்ள, 2,000க்கும் மேற்பட்ட வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர்.இதில், நாட்டிற்காக தமிழகத்தின் சென்னையைச் சேர்ந்த 'தி லிஜெண்ட் மார்ஷியல் ஆர்ட்ஸ் அசோசியேஷன்' அமைப்பில் கராத்தே பயிலும் வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர்.கட்டா, குமித் ஆகிய பிரிவுகளில் நடந்த பல்வேறு சுற்றுகளில் பங்கேற்ற வீரர்கள், தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி 10 தங்கம், தலா 5 வெள்ளி, வெண்கலம் என, 20 பதக்கங்களை வென்றனர்.மலேசியாவில் இருந்து, நேற்று முன்தினம் இரவு சென்னை திரும்பிய தமிழக வீரர்களுக்கு, சென்னை விமான நிலையத்தில் பூங்கொத்து கொடுத்து உறவினர்கள் மற்றும் சக வீரர் - வீராங்கனையர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்