மேலும் செய்திகள்
கஞ்சா கடத்திவர் கைது
06-Mar-2025
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் பகுதியில் உள்ள மாநில எல்லையோர சோதனைச்சாவடியில், போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற தனியார் பேருந்தில் பயணியத்த பயணியரின் உடைமைகளை சோதனையிட்டனர்.அதில் பயணித்த, திருச்சி ராம்ஜி நகரைச் சேர்ந்த நந்தினி, 50, என்பவரிடம், 16 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி கலால் போலீசார், அந்த பெண்ணை கைது செய்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், ஆந்திர மாநிலம் கூடூரில் இருந்து கஞ்சா கடத்தியது தெரியவந்தது.
06-Mar-2025