மது விற்ற பெண்கள் கைது
பொதட்டூர்பேட்டை: பொதட்டூர்பேட்டை அடுத்த நொச்சிலி பகுதியில், மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக பொதட்டூர்பேட்டை போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அங்கு, அரசு மதுபாட்டில் விற்பனை செய்து கொண்டிருந்த இரண்டு பெண்களை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள், நொச்சிலி தோட்டி காலனியை சேர்ந்த லட்சுமணன் மனைவி பூங்கொடி, 48, பாபு மனைவி சவுஜனா, 45, என தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து, 40, மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.