உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மகளிர் காவல் நிலையம் செங்குன்றத்தில் திறப்பு

மகளிர் காவல் நிலையம் செங்குன்றத்தில் திறப்பு

செங்குன்றம்:ஆவடி கமிஷனரகத்திற்கு உட்பட்ட செங்குன்றம் காவல் நிலையத்தில் நேற்று, அனைத்து மகளிர் காவல்நிலையத்தை, அமைச்சர் நாசர், போலீஸ் கமிஷனர் சங்கர் ஆகியோர் திறந்து வைத்தனர்.அமைச்சர் நாசர் அளித்த பேட்டி:தமிழக சட்டசபையில், செங்குன்றம் சரகத்தில் அனைத்து மகளிர் காவல்நிலையம் அமைப்பதற்கான அறிவிப்பை கடந்தாண்டு ஜூன் மாதம் முதல்வர் அறிவித்தார்.அதனடிப்படையில் தற்போது காவல்நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.செங்குன்றம் சரகத்திற்குட்பட்ட பகுதியில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகள், அம்பத்துாரில் உள்ள அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. கடந்தாண்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் குறித்து, 88 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது தவிர, 994 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு உள்ளது.அதிக எண்ணிக்கையில் வழக்குகள் பதிவானதால், வேலை பளுவை குறைக்கும் வகையில் செங்குன்றம் பகுதி மக்களுக்காக, இங்கு மகளிர் காவல்நிலையம் திறக்கப்பட்டுள்ளது. செங்குன்றம் அனைத்து மகளிர் காவல்நிலையம், சோழவரம், மீஞ்சூரை உள்ளடக்கியதாக செயல்படும். இங்கு, இன்ஸ்பெக்டர் பரணி தலைமையில் எட்டு பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை