உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சிறுமியை திருமணம் செய்த வாலிபர் கைது

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் கைது

திருத்தணி:திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா வாணிவிலாசபுரம் கிராமத்தை சேர்ந்தவர் நிர்மல்,19. இவர் பள்ளிப்பட்டு தாலுகாவை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து உறவு கொண்டதால், சிறுமி, 3 மாதம் கர்ப்பணியாகியுள்ளார். இந்நிலையில் கடந்த, 28ம் தேதி நிர்மல் சிறுமியை ஆந்திர மாநிலம் நகரிக்கு அழைத்துச் சென்று அங்குள்ள சாய்பாபா கோவிலில் திருமணம் செய்து கொண்டார். அதே பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்படி திருத்தணி அனைத்து மகளிர் நிலைய போலீசார் வழக்கு பதிந்து நேற்று சிறுமியை மீட்டு, நிர்மலை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி