மேலும் செய்திகள்
மின்கம்பி விழுந்து 2 மாடுகள் பலி
30-Nov-2024
திருப்போரூர், : திருப்போரூர் அடுத்த தையூர் ஏரி எதிர் வாயில் பகுதியில், சில மாடுகள் இறந்து கிடந்துள்ளன. அந்த வழியாக சென்றவர்கள், இதுகுறித்து மாடு வளர்ப்பவர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.மாடு வளர்ப்பவர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தனர்.இதில், தையூர் சிவன் கோவில் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணவேணி என்பவருக்குச் சொந்தமான 9 மாடுகள் மற்றும் கோவிந்தன் என்பவருக்குச் சொந்தமான ஒரு மாடு என, 10 மாடுகள் இறந்து கிடந்தன.கடந்த இரண்டு நாட்களுக்கு முன், மாடுகள் மேய்ச்சலுக்குச் சென்ற போது, புயல் காற்றில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்து, மாடுகள் இறந்தது தெரிந்தது.இதையடுத்து, மாடுகளின் உடல் மீட்கப்பட்டன. அதிர்ஷ்டவசமாக அந்த வழியே ஆட்கள் செல்லாததால், மனித உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.இந்நிலையில், இறந்த மாடுகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என, மாடுகளின் உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
30-Nov-2024