உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணியில் 10 ஏரிகள் நிரம்பின: விவசாயிகள் மகிழ்ச்சி

திருத்தணியில் 10 ஏரிகள் நிரம்பின: விவசாயிகள் மகிழ்ச்சி

திருத்தணி:திருத்தணி வருவாய் கோட்டத்தில் 10 ஏரிகள் நிரம்பி உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருத்தணி வருவாய் கோட்டத்தில் திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை மற்றும் திருவாலங்காடு ஆகிய நான்கு ஒன்றியங்களில், நீர்வளத்துறையினர் 79 ஏரிகளை பராமரித்து வருகின்றனர். கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக அவ்வப்போது பெய்து வரும் மழையால் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில், 79 ஏரிகளில், ஆர்.கே.பேட்டை மற்றும் பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் பத்து ஏரிகள் முழு கொள்ளளவு எட்டி உபரிநீர் வெளியே செல்கிறது. மீதமுள்ள ஏரிகளில், 25 சதவீதம் முதல், 75 சதவீதம் வரை மழைநீர் ஏரிகளில் தேங்கியுள்ளன. தற்போது, இரவு நேரங்களில் துாறல் மழையும், அவ்வப்போது பலத்த மழையும் பெய்து வருவதால், மேலும், பத்து ஏரிகளில், தண்ணீர் நிரம்பி வழிகிறது. இதனால் ஏரிப்பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி