உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மீஞ்சூரில் தெரு நாய்கள் தொல்லை இரண்டு நாளில் 10 பேர் பாதிப்பு

மீஞ்சூரில் தெரு நாய்கள் தொல்லை இரண்டு நாளில் 10 பேர் பாதிப்பு

மீஞ்சூர்மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், தெரு நாய்கள் அதிகளவில் சுற்றித் திரிகின்றன. இவை, ஒன்றோடு ஒன்று சண்டை போட்டுக் கொண்டும், நடந்து செல்வோரை விரட்டி சென்று கடிப்பதும் தொடர்கிறது.பேரூராட்சிக்கு உட்பட்ட புங்கம்பேடு பகுதியில், இரண்டு நாட்களில், 10க்கும் மேற்பட்டோரை அங்குள்ள வெறி நாய் ஒன்று கடித்து குதறியுள்ளது.நாய் கடிக்கு உள்ளானாவர்கள், மீஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனர். அதில், அதிக பாதிப்பிற்கு உள்ளான, 10 வயது சிறுவன் மட்டும், மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளான். தெருநாய்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.இதுகுறித்து மீஞ்சூர் பகுதிவாசிகள் கூறியதாவது:தெரு நாய்களால் சாலைகளில் விளையாடும் குழந்தைகள், கடைக்கு சென்று வரும் பெண்கள், வேலைக்கு செல்வோர் என, பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மீஞ்சூர் பேரூராட்சி நிர்வாகம் சாலையில் சுற்றித் திரியும் தெரு நாய்களை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி