உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / விநாயகர் கோவிலில் 108 பால்குட ஊர்வலம்

விநாயகர் கோவிலில் 108 பால்குட ஊர்வலம்

திருத்தணி:திருத்தணி அடுத்த பொன்பாடி கிராமத்தில், புதிதாக சாயி லட்சுமி கணபதி கோவில் கட்டப்பட்டு, கடந்த ஆக., 19ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடந்தது.இதையொட்டி, மண்டலாபிஷேக விழா தினமும் நடந்தது. காலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. நேற்று மகா கும்பாபிஷேகம் மண்டலாபிஷேக பூர்த்தி நடந்தது. காலை 9:00 மணிக்கு 108 பால்குட ஊர்வலம் நடந்தது.இதில், திரளான பெண் பக்தர்கள் பால்குடம் தலையில் சுமந்தவாறு, பொன்பாடி கிராமத்தில் இருந்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர்.பின், மூலவருக்கு பால் அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடந்தது. இரவு, உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இதில், திருத்தணி மற்றும் பொன்பாடி கிராமத்தைச் சேர்ந்த 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ