வேன் கவிழ்ந்து 11 பேர் காயம்
ஊத்துக்கோட்டை, பூண்டி ஒன்றியம், பிளேஸ்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் லாசர், 25. இவரது மனைவி அஸ்வினி, 21. இவர்களின் குழந்தைக்கு பெயர் வைக்கும் விழா, நேற்று முன்தினம் கூனிப்பாளையம் கிராமத்தில் நடந்தது.இவ்விழாவில் பங்கேற்க லாசர், உறவினர்களுடன் வேனில் சென்று கொண்டிருந்தார். கொல்லப்பாளையம் அருகே கட்டுப்பாட்டை இழந்து வயல்வெளியில் சாய்ந்தது.இதில், நாகம்மாள், 63, குஜாலா, 60, ஜெயக்கொடி, 40, உள்ளிட்ட 11 பேர் காயமடைந்தனர். திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பென்னலுார்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.