உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  துாய்மை பணியாளர்கள் 113 பேர் கைது

 துாய்மை பணியாளர்கள் 113 பேர் கைது

பொன்னேரி: உள்ளாட்சி அமைப்புகளில் தொகுப்பு ஊதியத்தில் பணிபுரியும் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என, வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற, 113 பேரை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, 524 ஊராட்சிகளில், துாய்மை பணியாளர்கள், துாய்மை காவலர்கள், டெங்கு கொசு ஒழிப்பு பணிகளில் ஈடுபடுபவர்கள், சுகாதார ஊக்குநர்கள் என பல்வேறு பணிகளில், 10,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தொகுப்பு ஊதியத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களின் பணிநிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தின் சார்பில், மாவட்ட தலைவர் கதிர்வேல் தலைமையில் பொன்னேரியில் போராட்டம் நடந்தது. தொடர்ந்து, சாலை மறியலில் ஈடுபட முயன்ற, 113 பேரை பொன்னேரி போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை