உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தீ விபத்தில் 13 வாகனங்கள் நாசம் 

தீ விபத்தில் 13 வாகனங்கள் நாசம் 

செங்குன்றம்,:செங்குன்றம் அடுத்த தண்டல்கழனி பகுதியில் மஹிந்திரா நிறுவனத்தின் கார், வேன் பழுது பார்க்கும் சர்வீஸ் நிலையம் அமைந்துள்ளது.நேற்று காலை 6:00 மணி அளவில், இங்கிருந்து புகை வெளியேறியது. சற்று நேரத்தில் தீ கொழுந்துவிட்டு எரிய துவங்கியது. இது குறித்து, காவல் கட்டுப்பாட்டு அறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு, பகுதிவாசிகள் தகவல் அளித்தனர்.உடனே, செங்குன்றம், மாதவரம், அம்பத்துார் மற்றும் செம்பியம் தீயணைப்பு நிலையங்களில் இருந்து வீரர்கள் விரைந்து வந்து, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.இந்த விபத்தில் 50க்கும் மேற்பட்ட சொகுசு கார், மினி வேன்கள் பாதிக்கப்பட்டன. இதில் ஏ.டி.எம்., மையத்திற்கு பணம் கொண்டு செல்ல பயன்படும் இரண்டு வேன்கள் மற்றும் 11 கார்கள் முற்றிலும் தீக்கிரையாயின.செங்குன்றம் போலீசாரின் விசாரணையில், மின் கசிவால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ