உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / 1.30 லட்சம் லிட்டர் பால் கொள்முதல்: கலெக்டர் தகவல்

1.30 லட்சம் லிட்டர் பால் கொள்முதல்: கலெக்டர் தகவல்

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், ஆவின் மூலம் தினமும் 1.30 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுவதாக, கலெக்டர் பிரதாப் தெரிவித்தார். திருவள்ளுர் தனியார் மண்டபத்தில், பால் உற்பத்தியாளர்களுக்கான நவீன தொழில்நுட்ப விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று நடந்தது. இதில், கலெக்டர் பிரதாப் தலைமை வகித்து பேசியதாவது: காஞ்சிபுரம் - திருவள்ளூர் மாவட்ட பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தில், 24,800 பால் உற்பத்தியாளர் வாயிலாக, 515 சங்கங்களில், தினமும் 1.30 லட்சம் லிட்டர் பால் கொள்மு தல் செய்யப்படுகிறது. ஒன்றிய கூட்டுறவு சங்க உற்பத்தியாளர்களிடம் உள்ள 32,000 கால்நடைகளின் தரம் உயர்த்தவும், தீவன முறைகளை, நவீன அறிவியல்பூர்வமாக செயல்படுத்தி, பால் உற்பத்தியாளர்களின் பொருளாதாரம் உயரும் வகையில், தமிழக அரசு பல திட்டங்களை செயல் படுத்தி வருகிறது. பால் உற்பத்தியாளர் அனைவரும் ஆவின் திட்டங்களை அறிந்து, முழுமையாக பயனடைய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ