மேலும் செய்திகள்
'ஐஸ்' சாப்பிட்ட5 சிறுவர்கள் பாதிப்பு
26-Apr-2025
திருத்தணி:திருத்தணி தாலுகாவில், எட்டாம் வகுப்பு படிக்கும், 13 வயது சிறுமியை, ஒன்பதாம் வகுப்பு படிக்கும், 14 வயது சிறுவன் நெருக்கமாக பழகி வந்துள்ளான்.இந்நிலையில், சில நாட்களுக்கு முன், 13 வயது சிறுமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அவரது பெற்றோர், ஒரு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவரிடம் காண்பித்தனர். பரிசோதித்த மருத்துவர், சிறுமி ஏழு மாத கர்ப்பிணியாக உள்ளார். மேல் சிகிச்சைக்காக, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.இதையடுத்து, சிறுமியின் பெற்றோர், திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசில் புகார் அளித்தனர். சிறுமியிடம் போலீசார் விசாரித்த போது, 14 வயது சிறுவன் காரணம் என தெரிவித்தார்.அதை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிந்து நேற்று, சிறுவனை கைது செய்து, திருவள்ளூர் மாவட்ட சிறுவர் சீர்திருத்த பள்ளியில் ஒப்படைத்தனர்.
26-Apr-2025