மேலும் செய்திகள்
எரும்புதின்னி கடத்தல் எட்டு பேர் கைது
21-Sep-2024
பள்ளிப்பட்டு:ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம் பாலமங்கலம் கிராமத்தில், அம்மையப்பர் என்ற தனியார் ஆயத்த ஆடை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில், பள்ளிப்பட்டு சுற்றுப்பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்து, நிறுவனத்தின் பேருந்தில், தொழிலாளர்கள் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். பேருந்தை, பள்ளிப்பட்டு அடுத்த ஈச்சம்பாடியை சேர்ந்த உதயகுமார், 32, என்பவர் ஓட்டி வந்தார். பள்ளிப்பட்டு அடுத்த கல்லாமேடு அருகே பேருந்து வந்தபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், 15 பேர் காயம் அடைந்தனர். உடன், பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பள்ளிப்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
21-Sep-2024