உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / 17 வயது சிறுமி தீயிட்டு தற்கொலை

17 வயது சிறுமி தீயிட்டு தற்கொலை

ஊத்துக்கோட்டை: மொபைல் போன் பார்ப்பதை தாய் கண்டித்ததால், விரக்தியடைந்த மகள் தீக்குளித்து பரிதாபமாக உயிரிழந்தார். ஆந்திராவைச் சேர்ந்த மாணிக்கம் - லட்சுமி தம்பதிக்கு, ஒரு மகனும், அன்னபூர்ணா என்ற மகளும் உள்ளனர். மகன், மகளின் படிப்பிற்காக, குடும்பத்துடன் வடமதுரை ஊராட்சி, எர்ணாங்குப்பத்தில் வசித்து வருகின்றனர். அன்னபூர்ணா, பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்து வீட்டில் இருந்து வந்தார். கடந்த 4ம் தேதி அன்னபூர்ணா நீண்ட நேரம் மொபைல் போன் பார்த்துக் கொண்டிருந்தார். இதை தாய் கண்டித்துள்ளார். இதில், விரக்தியடைந்த அன்னபூர்ணா, மாடிக்கு சென்று டீசலை ஊற்றி தீயிட்டுக் கொண்டார். சிகிச்சைக்காக, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பெரியபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை