மேலும் செய்திகள்
திருமாங்கல்ய திட்டத்தில் தங்கம் வழங்கும் விழா
08-Feb-2025
திருவள்ளூர்:திருவள்ளூரில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், 'பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' திட்டத்தின் 10 ஆண்டுகள் நிறைவு பெற்றதையடுத்து, கலெக்டர் பிரதாப் தலைமையில் நடந்த விழாவில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் நாசர், திருமண உதவி திட்டத்தின் தாலிக்கு தங்கம் வழங்கினார்.பின், அமைச்சர் நாசர் பேசியதாவது:தமிழக அரசு குழந்தைகளுக்கான உதவி எண்:1098, பெண்களுக்கான உதவி எண்:181, வலைத்தள பாதுகாப்பு எண்:1930, கல்வி உதவி வழிகாட்டி எண்:14417, குழந்தைகள் பாதுகாப்பு, பெண்களின் பாதுகாப்பு, குழந்தை திருமணங்களை தடுத்தல் மற்றும் பள்ளி செல்லும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக மேற்காணும் இலவச உதவி எண்களை தொடர்பு கொண்டு, பெண்களின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்தினை உறுதி செய்யலாம்.தமிழக அரசின் சிறப்புத் திட்டமாக மகளிருக்கு உதவிடும் வகையில், தாலிக்கு தங்கம் திட்டத்தில் 2024- - 25ம் நிதியாண்டிற்கு, திருவள்ளூர் மாவட்டத்தில், 181 பயனாளிகளுக்கு, 1 கோடியே, 11 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1.45 கிலோ கிராம் தங்க நாணயங்கள் மற்றும் 74 லட்சம் ரூபாய் மதிப்பிலான திருமண நிதியுதவித் தொகை வழங்கப்பட்டுளளது.இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ.க்கள் - திருத்தணி சந்திரன், கும்மிடிப்பூண்டி கோவிந்தராஜன், பொன்னேரி துரை சந்திரசேகர், திருவள்ளூர் நகராட்சி தலைவர் உதயமலர், சமூக நலத்துறை கண்காணிப்பாளர் பார்த்திபன் உட்பட பலர் பங்கேற்றனர்.
08-Feb-2025