உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தமிழகத்திற்கு 2 டி.எம்.சி., கிருஷ்ணா நீர் வரத்து

தமிழகத்திற்கு 2 டி.எம்.சி., கிருஷ்ணா நீர் வரத்து

ஊத்துக்கோட்டை, கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்திற்கு இதுவரை, 2 டி.எம்.சி., கிருஷ்ணா நீர் வந்துள்ளது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக, கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தம் போடப்பட்டது. இதன்படி, ஜூலை - அக்டோபர் மாதங்களில், 8 டி.எம்.சி., ஜனவரி - ஏப்ரல் மாதங்களில், 4 டி.எம்.சி., கிருஷ்ணா நீர் தர வேண்டும். இதற்காக கண்டலேறு அணையில் இருந்து, தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோபாயின்ட் வழியே, பூண்டி சத்தியமூர்த்திசாகர் நீர்த்தேக்கம் வரை, 177 கி.மீ., கால்வாய் வெட்டப்பட்டது. இந்தாண்டு ஒப்பந்தப்படி, மார்ச் மாதம், 28ம் தேதி முதல் தமிழகத்திற்கு கிருஷ்ணா நீர் வந்து கொண்டு இருக்கிறது. ஃதொடர்ந்து கிருஷ்ணா நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், ஜூலை - அக்டோபர் மாதங்களில் தர வேண்டிய, 8 டி.எம்.சி., நீரில் நேற்று காலை வரை, 2 டி.எம்.சி., கிருஷ்ணா நீர் சாய்கங்கை கால்வாய் வாயிலாக வந்துள்ளது. கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு, 1,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று காலை, தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோபாயின்டில் வினாடிக்கு, 473 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ