உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / 225 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

225 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

வடக்கு கடற்கரை, செப். 22– கடற்கரை ரயில் நிலையத்தில், கேட்பாரற்று கிடந்த, 225 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை, ரயில்வே போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர். சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில், நேற்று காலை 11:00 மணியளவில், ரயில்வே போலீசார், புறநகர் ரயில்களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, நடைமேடை 2ல், கேட்பாரற்று கிடந்த, 225 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை கைப்பற்றினர். பின், அரிசி மூட்டைகளை, சென்னை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !