உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / 25 கிலோ கஞ்சா பறிமுதல் 3 பேர் கைது

25 கிலோ கஞ்சா பறிமுதல் 3 பேர் கைது

திருத்தணி:திருத்தணியில் இருந்து சென்னைக்கு கடத்த முயன்ற 25 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் மூவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.ஆந்திர மாநிலத்தில் இருந்து திருத்தணி வழியாக சென்னைக்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. திருத்தணி போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியரசன் தலைமையிலான போலீசார் நேற்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது ரேணிகுண்டாவில் இருந்து பேருந்தில் திருத்தணி சென்னை பைபாஸ் ரவுண்டானா பகுதியில் சந்தேகப்படும்படி வந்து இறங்கிய மூன்று இளைஞர்களை போலீசார் சோதனை செய்தனர். போலீசாரை கண்டதும் தப்பியோடியவர்களை போலீசார் பிடித்து சோதனை செய்தபோது, பையில் 25 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.பின் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சங்கர்ராய் 28, ராஜிவ்ராய் 38, திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த ஆகாஷ் 30 உள்ளிட்ட மூவரும் அசாம் மாநிலத்தில் இருந்து ஆந்திரா வழியாக கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. மூவரையும் கைது செய்த போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை