உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / 275 கிலோ குட்கா பறிமுதல்

275 கிலோ குட்கா பறிமுதல்

ஊத்துக்கோட்டை:ஆந்திராவில் இருந்து தமிழக பகுதியான ஊத்துக்கோட்டை வழியே அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்கள் கடத்துவதாக மாவட்ட எஸ்.பி.,க்கு தகவல் கிடைத்தது.எஸ்.பி., சீனிவாசபெருமாள் உத்தரவின்படி எஸ்.பி., தனிப்படை எஸ்.ஐ., மகாலிங்கம் மற்றும் போலீசார் ஊத்துக்கோட்டை அண்ணாநகர் சோதனைச் சாவடியில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர்.அப்போது அவ்வழியே வந்த காரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அதில் மூட்டை, மூட்டையாக குட்கா புகையிலைப் பொருட்கள் இருந்தது தெரியவந்தது. 275 கிலோ குட்கா புகையிலைப் பொருட்கள் இருந்தன.இதுதொடர்பாக ,கொடுங்கையூர் ஜோசப், 44, செங்குன்றம், லட்சுமிபுரம் அருணாசலம், 31, ஆகிய இருவரை போலீசார் கைது செய்து, ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ