உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மின்கம்பி அறுந்து விழுந்து 3 மாடுகள், 2 கன்றுகள் பலி

மின்கம்பி அறுந்து விழுந்து 3 மாடுகள், 2 கன்றுகள் பலி

ஊத்துக்கோட்டை:பூண்டி ஒன்றியம், மெய்யூர் ஊராட்சி, பாளையக்கார தெருவில் வசித்து வருபவர் செல்வம், 45. இவர் மாடுகளை வளர்த்து, வருகிறார்.சமீபத்தில் பெய்த மழையால் செல்வம் வீட்டின் அருகே வயல்வெளியில் மின்கம்பிகள் அறுந்து விழுந்துள்ளன. மாடுகள் மேய்ச்சலுக்காக அப்பகுதியில் சென்ற போது மின்சாரம் தாக்கி ஒரு பசுமாடு, இரண்டு கன்று குட்டிகள் பலியாயின. ஊத்துக்கோட்டை கால்நடை மருத்துவர்கள், மாடுகளை பிரேத பரிசோதனை செய்தனர். ஊத்துக்கோட்டை அருகே, செஞ்சியகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகர். இவரது மனைவி மஞ்சுளா. நேற்று காலை தன் இரண்டு மாடுகளை, வயல்வெளியில் மேய்த்துக் கொண்டு இருந்தார். அப்போது மின்கம்பி அறுந்து மாடுகள் மீது விழுந்தது.இதில் இரண்டு மாடுகளும் சம்பவ இடத்திலேயே பலியாயின. இதுகுறித்து ஊத்துக்கோட்டை மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ