உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மூதாட்டியிடம் 3 சவரன் திருட்டு

மூதாட்டியிடம் 3 சவரன் திருட்டு

திருத்தணி:திருத்தணி சித்துார் சாலையை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மனைவி சம்பூர்ணம், 66. இவர், சத்துணவு அமைப்பாளராக வேலை செய்து வந்தார். 2019ம் ஆண்டு பணி ஓய்வு பெற்றார். நேற்று முன்தினம் மாலை, சம்பூர்ணம் திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு, ஓய்வூதியம் பெறுவதற்கான, வாழ்நாள் சான்று கொடுக்க வந்தார். பின், வீட்டிற்கு திருத்தணி- அரக்கோணம் சாலையில் நடந்து சென்றுக் கொண்டிருந்தார்.அப்போது, 40 வயது மதிக்க ஆண் ஒருவர், சம்பூர்ணத்திடம், 'இந்த இடத்தில் திருடர்கள் அதிக நடமாட்டம் இருப்பதால், 'நீங்கள் கையில் போட்டுள்ள வளையல்களை கழற்றி கொடுங்கள், நான் பத்திரமாக ஒரு காகிதத்தில் மடித்து உங்கள் கைப்பையில் வைக்கிறேன்' எனக் கூறினார்.மூன்று சவரன் வளையல்களை சம்பூர்ணம் கழற்றி கொடுக்க, அந்த மர்ம நபர் வெறும் பேப்பரை மட்டும் மடித்து கைப்பையில் வைத்து விட்டு பத்திரமாக செல்லுங்கள் என அனுப்பினார். வீட்டிற்கு சென்ற பின் சம்பூர்ணம் கைப்பையை திறந்து பார்த்த போது, வெறும் காகிதம் மட்டுமே இருந்தது.இது குறித்து சம்பூர்ணம் கொடுத்த புகாரின்படி திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை