உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பூட்டிய வீட்டில் 3 சவரன் திருட்டு

பூட்டிய வீட்டில் 3 சவரன் திருட்டு

திருவள்ளூர்:பூட்டிய வீட்டில், 3 சவரன் நகை மற்றும் பணம் திருடு போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் அடுத்த காக்களூர், சிவன்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பட்டாபி மனைவி தனலட்சுமி, 49. காக்களூர் அங்கன்வாடியில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 31ம் தேதி காலை வேலைக்குச் சென்று விட்டு, மதியம் வீட்டிற்கு வந்தார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, வீட்டிற்குள் இருந்த பீரோவில் வைத்திருந்த, 3 சவரன் நகை, 4,000 ரூபாய் திருடு போனது தெரிந்தது. இதுகுறித்த புகாரின்படி, திருவள்ளூர் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை