உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வெங்கலில் 300 கிலோ இரும்பு கம்பிகள் மாயம்

வெங்கலில் 300 கிலோ இரும்பு கம்பிகள் மாயம்

ஊத்துக்கோட்டை, வெங்கல் பகுதியில் மேம்பாலம் கட்டுமான பணிக்காக வைக்கப்பட்டு இருந்த, 300 கிலோ இரும்பு கம்பிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். விழுப்புரம் மாவட்டம், மேலமாம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரகுமார், 35. இவர், எஸ்.பி.ஆர்., எனப்படும் தனியார் கட்டுமான நிறுவனத்தில் மேஸ்திரியாக பணியாற்றி வருகிறார். இந்த நிறுவனம் மூலம், ஊத்துக்கோட்டை தாலுகா வெங்கல் ஆரிக்கம்பேடு கிராமத்தில் மேம்பால பணிகள் நடந்து வருகின்றன. இதற்கு தேவையான ஜல்லி, இரும்பு கம்பி ஆகியவை இருப்பு வைக்கப்பட்டுள்ளது. கடந்த, 30ம் தேதி இரவு மர்ம நபர்கள், அங்கிருந்த, 300 கிலோ இரும்பு கம்பிகளை திருடிச் சென்றனர். இதுகுறித்து, சந்திரகுமார் அளித்த புகாரையடுத்து, வெங்கல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை