உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கடன் பெற்று தருவதாக 40 லட்சம் மோசடி: எஸ்.பி., கலெக்டரிடம் புகார்

கடன் பெற்று தருவதாக 40 லட்சம் மோசடி: எஸ்.பி., கலெக்டரிடம் புகார்

திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுக்கா, பஞ்செட்டி கிராமத்தில் ஆனந்த வள்ளி மகளிர் குழு, அம்மன் மகளிர் குழு செயல்பட்டு வருகிறது. இதில் ஆனந்தவள்ளி குழுவிற்கு சுரேகா தலைவராகவும், அவரது தாயார் ஜோதி அம்மன் மகளிர் குழுவில் உறுப்பினராகவும் இருந்து இந்த குழுவை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், இவர்கள் இருவரும், அம்மன் மகளிர் குழு சார்பில், பொன்னேரி தாலுக்கா, பண்டிகாவனுார் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், கடந்த 2023ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 13ம் தேதி, கூட்டுக் கடனாக 20 லட்சம் ரூபாய் பெற்றுள்ளனர்.அதே போல, ஆனந்தவள்ளி மகளிர் குழு பெயரிலும், 20 லட்சம் ரூபாய் என, மொத்தம் 40 லட்சம் ரூபாய் கடனாக பெற்று, அதை ஒரு குழுவில் உள்ள 12 உறுப்பினர்கள் என, இரண்டு குழுவிலும் உள்ள 24 பேருக்கு தலா, 1 லட்சம் ரூபாய் வீதம், 24 லட்சம் ரூபாய் கொடுத்துவிட்டு மீதமுள்ள 16 லட்சத்தை சுரேகா மற்றும் அவரது தாயார் ஜோதி மற்றும் கூட்டுறவு வங்கி முன்னாள் செயலர் ராஜா ஆகியோர் கையாடல் செய்ததாக கூறப்படுகிறது.இதனால் சந்தேகம் அடைந்த பரிமளா என்பவர், கடந்த ஜனவரி மாதம், சுரேகா மற்றும் ஜோதியிடம் கேட்டதற்கு, 1 லட்சம் ரூபாய் வட்டி மட்டும் கட்டியுள்ளனர். அசல் பணத்தை செலுத்த முடியாது. உங்களால் முடிந்ததைப் பார்த்துக் கொள்ளுங்கள் என, மிரட்டும் தொனியில் பேசியுள்ளனர்.எனவே, கடன் வாங்கியதில் 16 லட்சம் ரூபாய் மற்றும் திருப்பி செலுத்திய பணம், 24 லட்சம் ரூபாய் என மொத்தம் 40 லட்சம் ரூபாய் வரை மோசடி மற்றும் வங்கிகளிலும் ஆதார் எண்ணை போலியாக பயன்படுத்தி கடன்பெற முயற்சி செய்துள்ளதாக, எஸ்.பி மற்றும் கலெக்டரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.மேலும், சுரேகா மற்றும் அவரது தாயார் ஜோதி மற்றும் முன்னாள் வங்கி செயலர் ராஜா ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத் தர வேண்டும் என, பாதிக்கப்பட்ட மகளிர் சுயஉதவிக் குழு பெண்கள் நேற்று, திருவள்ளூர் கலெக்டர் மற்றும் எஸ்.பி.யிடம் புகார் மனு அளித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ