உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / 10ம் வகுப்பு பொது தேர்வு 402 பேர் ஆப்சென்ட்

10ம் வகுப்பு பொது தேர்வு 402 பேர் ஆப்சென்ட்

திருவள்ளூர்:பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நேற்று துவங்கி, வரும் 15 வரை நடக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், 144 தேர்வு மையங்களில், தனித்தேர்வர் உட்பட, 32,491 பேர் தேர்வுக்கு தயாராகி வந்தனர்.தேர்வு கூடங்களில், மாணவர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை மற்றும் தடையில்லா மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தேர்வு அறையில் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்கும் வகையில், 80 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.ஏற்கனவே, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வு நிறைவடைந்த நிலையில், நேற்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கியது. முதல் நாளான நேற்று, மொழி தேர்வில், 32,029 பேர் பங்கேற்றனர். 402 பேர் தேர்வு எழுதவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை