போதையில் மோதல் 5 பேர் படுகாயம்
சோழவரம், சோழவரம் அடுத்த, எடப்பாளையம் பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் பிரபாகரன், 25, கார்த்திக், 28, சரவணன், 30. இவர்கள், நேற்று முன்தினம் இரவு, அதே பகுதியில் உள்ள பிரியாணி கடையில் உணவு அருந்திக் கொண்டிருந்தனர்.அப்போது, அதே எடப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி, 22, கோபி, 22, ஆகியோர் மதுபோதையில், அங்கு வந்தனர். உணவு அருந்திக் கொண்டிருந்த மேற்கண்ட நண்பர்கள் மூவரிடம் தகராறு செய்தனர். இதில், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் பலமாக தாக்கிக் கொண்டனர்.இதில், இரு தரப்பையும் சேர்ந்த ஐந்து பேரும் காயம அடைந்தனர். உடனடியாக அவர்கள், அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.இச்சம்பவம் தொடர்பாக, சோழவரம் போலீசார் இருதரப்பினர் மீதும் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.