உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இரு வீடுகளில் 5 சவரன் திருட்டு

இரு வீடுகளில் 5 சவரன் திருட்டு

ஊத்துக்கோட்டை:அடுத்தடுத்து இரு வீடுகளில் நகை, பணம் திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.வெங்கல் அடுத்த, அத்தங்கிகாவனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு, 55. நேற்று முன்தினம் இரவு இவர் தனது குடும்பத்துடன் உறங்கிக் கொண்டு இருந்தார்.அதிகாலை பாத்ரூம் செல்ல எழுந்தபோது, வீட்டின் பின் பக்க கதவு திறந்து இருந்தது. வீட்டில் இருந்த பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த, இரண்டரை சவரன் நகை திருடு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இதே பகுதியில் வசித்து வரும் துரைமுத்து என்பவர் வீட்டின் பின்புற கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் இரண்டரை சவரன், செயின், கம்மல் மற்றும் 50,000 ரூபாயை திருடிச் சென்றனர்.இதுகுறித்து திருநாவுக்கரசு, துரைமுத்து ஆகியோர் வெங்கல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இப்புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ