உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தமிழ் துணை தேர்வில் 681 பேர் ஆப்சென்ட்

தமிழ் துணை தேர்வில் 681 பேர் ஆப்சென்ட்

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று நடந்த தமிழ் துணைத்தேர்வில், 681 பேர் தேர்வு எழுத வரவில்லையென, பள்ளிக் கல்வித்துறையினர் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் மார்ச், ஏப்ரலில் 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு நடந்தது. இந்த தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு ஜூன், ஜூலையில் துணை தேர்வுகள் நடத்தப்படுகின்றன. பிளஸ் 2 துணை தேர்வு ஏற்கனவே முடிந்துவிட்டது.நேற்று 10ம் வகுப்பு, பிளஸ் 1 துணை தேர்வு துவங்கியது. இதில், திருவள்ளூர், பொன்னேரி கல்வி மாவட்டத்தில், 16 மையங்களில் தேர்வு நடந்தது. 10ம் வகுப்பு தமிழ் தேர்விற்கு 2,176 பேர் விண்ணப்பித்ததில் 1,856 பேர் தேர்வெழுதினர். 320 பேர் வரவில்லை.அதேபோல், பிளஸ் 1தமிழ் தேர்விற்கு 2,374 பேர் விண்ணப்பித்ததில், 2,013 பேர் தேர்வெழுதினர். 361 பேர் வரவில்லை. மொத்தம் 681 பேர் தேர்வு எழுத வரவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை