திருவள்ளுர் கலெக்டர் அலுவலக
வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், நாட்டின் 75வது
குடியரசு தின விழா நேற்று கோலாலகமாக கொண்டாடப்பட்டது. கலெக்டர் பிரபுசங்கர் தேசிய கொடியை ஏற்றி, மூவர்ண பலுான் மற்றும் சமாதான புறாக்களை பறக்க விட்டார். பின், காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.தாட்கோ, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட துறை வாயிலாக மொத்தம், 25 பயனாளிகளுக்கு, 27 லட்சத்து 91 ஆயிரத்து 91 ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்டம் மற்றும் கடனுதவி வழங்கினார்.தியாகிகளை கவுரவித்து, 23 காவலர்களுக்கு முதல்வர் பதக்கம் மற்றும் சிறப்பாக பணிபுரிந்த 24 போலீசாருக்கு முதல்வரின் காவலர் பதக்கம், பல்வேறு அரசுத் துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய 603 அலுவலர்களுக்கு பாராட்டு கேடயம் வழங்கினார். தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.நிகழ்ச்சியில் திருவள்ளூர் எஸ்.பி., சிபாஸ் கல்யாண், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சித் திட்ட இயக்குநர் சுகபுத்திரா மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். அரசு அலுவலகம்
திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், மாவட்ட முதன்மை நீதிபதி செல்வசுந்தரி, கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார்.திருவள்ளூர் கமிஷனர் சுபாஷிணி முன்னிலையில், நகராட்சி தலைவர் தலைவர் உதயமலர் பாண்டியன், தேசியக்கொடி ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினர். இதே போல், திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், திருவள்ளூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களிலும் குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றி வைக்கப்பட்டது.l கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழாவில், சேர்மன் சிவகுமார் தேசிய கொடி ஏற்றினார். பி.டி.ஓ.,க்கள் சந்திரசேகர், அமில்தமன்னன், துணை சேர்மன் மாலதி முன்னிலை வகித்தனர். கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி., முகாம் அலுவலகத்தில் மாவட்ட குற்ற பிரிவு டி.எஸ்.பி., கந்தன், தாசில்தார் அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் தாமோதரன், பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் சகிலா, மாநில நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் உதவி கோட்ட பொறியாளர் ஆண்டி ஆகியோர் தேசிய கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினர்.l ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தில், தாசில்தார் வாசுதேவன், டி.எஸ்.பி., அலுவலகத்தில் டி.எஸ்.பி., கணேஷ்குமார், போலீஸ் நிலையத்தில் ஆய்வாளர் ஏழுமலை, ஆண்கள் மேனிலைப் பள்ளியில், தலைமையாசிரியர் ஜெயச்சந்திரன். கடம்பத்துார்
பேரூராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் பங்கஜம், அரசு மருத்துவமனையில் மருத்துவர் வர்ஷினி, பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் ஆய்வாளர் வெங்கடேசன், அரசு மேனிலைப் பள்ளியில், தலைமையாசிரியர் எல்லாபுரம் பி.டி.ஓ., அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவர் ரமேஷ்.அரசு மருத்துவமனையில் மருத்துவர் சங்கீதா ஆகியோர் கொடி ஏற்றி வைத்தனர்.lகடம்பத்துார் ஒன்றியம் உளுந்தை ஊராட்சியில் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி தலைமையாசிரியர் பி.கிருஷ்ணன் முன்னிலையில் ஊராட்சி மன்ற தலைவர் எம்.கே.ரமேஷ் தலைமை வகித்து தேசியக் கொடியேற்றினார்.பின் பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பள்ளி ஆசிரியர் எம்.வடிவேல் குடியரசு தினம் குறித்து சிறப்புரையாற்றினார். இதில் மாணவர்கள் பிரமிடு போல் அணிவகுத்து நின்றனர். தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷிடம், முன்னாள் மாணவர்களுக்கான மாநில அளவிலான விருது பெற்ற பள்ளியின் முன்னாள் மாணவரும், ஊராட்சி மன்ற தலைவருமான ரமேைஷக்கு பள்ளி ஆசிரியர்கள் பாராட்டி நினைவு பரிசு வழங்கினர்.l திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், ஆர்.டி.ஓ., தீபா காலை, 7:30 மணிக்கு தேசிய கொடி ஏற்றி வைத்து, இனிப்பு வழங்கினார். பின் கொடிநாள் வசூலில் சிறப்பாக பணியாற்றிய பள்ளிப்பட்டு வருவாய் ஆய்வாளர் கணேசன் என்பவருக்கு விருது வழங்கி பாராட்டினர்.திருத்தணி தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் மதன், திருத்தணி ஒன்றிய அலுவலகத்தில் சேர்மன் தங்கதனம், அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளியில், தி.மு.க. - எம்.எல்.ஏ. சந்திரன் ஆகியோர் பங்கேற்று தேசிய கொடி ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினர்.திருத்தணி டி.எஸ்.பி., அலுவலகத்தில் டி.எஸ்.பி., விக்னேஷ், திருத்தணி நகராட்சி அலுவலகத்தில், சேர்மன் சரஸ்வதிபூபதி, திருத்தணி அரசினர் கலைக் கல்லுாரியில் முதல்வர் பூரணசந்திரன் உள்பட அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி மற்றும் அலுவலகங்களில் குடியரசு தினவிழா ஒட்டி, தேசிய கொடி ஏற்றி வைத்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.திருத்தணி சுதந்திர பள்ளியில், பள்ளி தாளாளர் சியமளாரங்கநாதன், தளபதி மெட்ரிக் மேனிலைப் பள்ளியில் தாளாளர் பாலாஜி, ஆகியோர் தேசிய கொடி ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினர். திருத்தணி ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தில், மாவட்ட துணைத் தலைவர் ரங்கநாதன் முன்னிலையில் கிளை பொறுப்பு தலைவர் ராமகிருஷ்ணன் தேசிய கொடியை எற்றி வைத்தார்.
தமிழக அரசுக்கும், மக்களுக்கும் பாலமாக விளங்கும் செய்தி மக்கள் தொடர்புத்துறை. திருவள்ளூர் மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலராக ஒரு மாதத்திற்கு முன் மோகன் பதவியேற்றார்.இரண்டு உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடங்கள் ஓராண்டாக காலியாக உள்ளன. புதிதாக பதவியற்ற செய்தி மக்கள் தொடர்பு அலுவலரும் கடந்த 15 தினங்களுக்கு முன் பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.இதனால் கடந்த 15 தினங்களாக செய்தி மக்கள் தொடர்பு துறையில் பணிபுரியும் அலுவலர்கள் தலைமை இல்லாமல் தங்கள் இஷ்டம் போல் பணியாற்றுகின்றனர்.நிருபர்களுக்கு அரசின் திட்டங்கள் குறித்த தகவல் அனுப்புவது, செய்தி அனுப்புவதில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. குடியரசு தின விழா மற்றும் கிராம சபை குறித்த செய்திகள் அனுப்புவதிலும் குளறுபடி மற்றும் தாமதம் ஏற்பட்டது.எனவே கலெக்டர் பிரபு சங்கர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.