மேலும் செய்திகள்
அனுமதியின்றி பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு
14-Feb-2025
மணவாளநகர்:மணவாளநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட போளிவாக்கம் பகுதியில் சூதாட்டம் நடப்பதாக, மாவட்ட எஸ்.பி.,க்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, எஸ்.பி., சீனிவாசபெருமாள் உத்தரவின்படி, சிறப்பு படை போலீசார் நேற்று போளிவாக்கம் ஊராட்சிக்குட்பட்ட பாக்குப்பேட்டை பகுதியில் உள்ள மாந்தோப்பில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தப்பியோட முயன்றனர். இதையடுத்து, சிறப்பு படை போலீசார், செங்காடு மணிகண்டன், 33, யாபேஷ், 40, ராஜு, 30, பாபு, 27, நாகராஜ், 35, வரதன், 42, தொடுகாடு பார்த்திபன், 42, அழிஞ்சிவாக்கம் பிரகாஷ், 35 ஆகிய எட்டு பேரை கைது செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த மணவாளநகர் போலீசார், 1 லட்சத்து 16 ஆயிரத்து 160 ரூபாய் மற்றும் ஆறு இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.
14-Feb-2025