மேலும் செய்திகள்
கோடை மழையால் மானாவாரி சாகுபடி
16-May-2025
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில், 9.3 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தில் இம்மாத துவக்கத்தில் இருந்து, அவ்வப்போது மழை பெய்து வருகிறது. பகலில் வெயில் கொளுத்தினாலும், மாவட்டத்தின் பல பகுதிகளில் மாலை நேரம் மழை பெய்து வருகிறது. இதனால், கோடைக்காலத்தில் நிலவிய வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்துள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தில் பகல் முழுதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை இரண்டு மணி நேரம் வரை பலத்த மழை பெய்தது. மழை காரணமாக சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் குளம்போல் தேங்கியது.நேற்று காலை நிலவரப்படி, மாவட்டத்தில் அதிகபட்சமாக ஊத்துக்கோட்டையில், 9.3 செ.மீ., மழை பதிவாகியது.மாவட்டத்தில் பெய்த மழையளவு விவரம்:இடம் மழையளவு (செ.மீட்டரில்)ஊத்துக்கோட்டை 9.3பூண்டி 8.2கும்மிடிப்பூண்டி 7.7பொன்னேரி 6.9திருத்தணி 6.7ஆவடி 5.6திருவள்ளூர் 5.4செங்குன்றம் 5.2சோழவரம் 4.8பூந்தமல்லி 4.6பள்ளிப்பட்டு 4.5திருவாலங்காடு 3.3தாமரைப்பாக்கம் 3.1
16-May-2025