மேலும் செய்திகள்
அர்த்த மச்சேந்திர ஆசனத்தில் 105 மாணவர்கள் சாதனை
07-Jan-2025
கும்மிடிப்பூண்டி,:கும்மிடிப்பூண்டி அடுத்த, தேர்வழி கிராமத்தில் இயங்கி வரும் ஜெ.ஜெ.ஜெ., அக்னி சிறார்கள் சிலம்ப கலைக்கூடம் சார்பில், நேற்று, சிலம்பாட்டத்தில் உலக சாதனை நிகழ்வு நடந்தது.தேர்வழி ஊராட்சி முன்னாள் தலைவர் கிரிஜா தலைமையில் நடந்த நிகழ்வில், அம்பத்துார் தாசில்தார் நித்யானந்தம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.பயிற்சியாளர் ஜோதிலிங்கம் மேற்பார்வையில், சிலம்ப கூடத்தில் பயிற்சி பெற்று வரும், 90 மாணவர்கள், தொடர்ந்து இரண்டரை மணி நேரம், ஸ்டார் வடிவ சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர்.இவர்களது சாதனை, யுனிக்கோ உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது. பயிற்சியாளர் மற்றும் மாணவர்களுக்கு, சான்றுகள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
07-Jan-2025