உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பிரியாணி வாங்க பைக்கில் சென்ற சிறுவன் பலி

பிரியாணி வாங்க பைக்கில் சென்ற சிறுவன் பலி

ஊத்துக்கோட்டை, ஊத்துக்கோட்டை அடுத்த தாமரைக்குப்பத்தை சேர்ந்தவர் காசிம், 45. இவரது மகன் முகம்மது ஆயூப், 16. நேற்று முன்தினம் மாலை காசிம் தன் மகனிடம் பிரியாணி வாங்கி வரச் சொன்னார்.முகம்மது ஆயூப், ஸ்பிளண்டர் பைக்கில் ஊத்துக்கோட்டை சென்று பிரியாணி வாங்கிக் கொண்டு திரும்பினார். தொம்பரம்பேடு அருகே வரும்போது, எதிரே செங்கரையை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் ஓட்டி வந்த ஜூபிடர் பைக் மோதியது. இருவரும் 'ஹெல்மெட்' அணியவில்லை.விபத்தில் முகம்மது ஆயூப், தலையில் பலத்த காயம் அடைந்தார். திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின், சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து ஊத்துக்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை