உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / முன் சென்ற ஸ்கூட்டி மீது கார் மோதி இருவர் பலி

முன் சென்ற ஸ்கூட்டி மீது கார் மோதி இருவர் பலி

மறைமலை நகர்: திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் அடுத்த கவசநல்லாத்துார் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார், 50. பூந்தமல்லி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் பணிபுரிந்து வந்தார்.நேற்று காலை, திருவள்ளூர் மாவட்டம், பரணிபுத்துார் பகுதியை சேர்ந்த தன் நண்பரான ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் ரவி, 48, என்பவருடன், செங்கல்பட்டு பதிவாளர் அலுவலகத்திற்கு, டி.வி.எஸ்., ஸ்கூட்டி இருசக்கர வாகனத்தில் சென்றனர்.ஸ்கூட்டியை ரவி ஓட்டினார். சிங்கபெருமாள்கோவிலை கடந்து,ஜி.எஸ்.டி., சாலையில் 10:15 மணிக்கு சென்று கொண்டிருந்த போது, பின்னால் அதிவேகமாக வந்த இன்னோவா கார், ஸ்கூட்டி மீது மோதியது. இதில், சாலையில் விழுந்து படுகாயமடைந்த செந்தில்குமார், சம்பவ இடத்திலேயே பலியானார். சக வாகன ஓட்டிகள், படுகாயமடைந்த ரவியை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, ரவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், செந்தில்குமார் உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இச்சம்பவம் குறித்து, வழக்கு பதிவு செய்த போலீசார், இன்னோவா கார் ஓட்டுனரான திருநீர்மலை பகுதியை சேர்ந்த பவித்ரன், 32, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ