உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / போதையில் மூவரை தாக்கிய சரித்திர பதிவேடு குற்றவாளி கைது

போதையில் மூவரை தாக்கிய சரித்திர பதிவேடு குற்றவாளி கைது

திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த, முருக்கஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் சரவணன், 30; இவர், நண்பர்களான சரத், 28, அருண், 20 ஆகிய மூன்று பேரும், கடந்த 18ம் தேதி இரவு, காக்களூர் எடைமேடை அருகே, மது அருந்தி கொண்டிருந்தனர்.அப்போது, அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த அம்பேத்கர், 29, சூர்யா, 25, சந்தோஷ், 22, தினேஷ், 20 ஆகிய நான்கு பேரும், மதுபோதையில் ஆபாசமாக பேசி, சரவணன் மற்றும் இரு நண்பர்கள் என, மூவரையும் இரும்பு ராடால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து சென்றனர்.இதுகுறித்து சரவணன் அளித்த புகாரையடுத்து, திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.இதையடுத்து, காக்களூர் பகுதியில், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த அம்பேத்கர் என்பவரை, தாலுகா போலீசார், கடந்த 19-ம் தேதி மாலை கைது செய்து, காவல் நிலையம் அழைத்து சென்றனர்.அன்றிரவு அம்பேத்காரை நோயாளிகளை அழைத்துச் செல்லும் தள்ளுவண்டியில் வைத்து, திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.தகவலறிந்த அம்பேத்கரின் பெற்றோர், அரசு மருத்துவமனைக்கு வந்து, போலீசார் தன் மகனை சராமரியாக தாக்கியதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.ஆனால், போலீசார் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவரை துரத்தியபோது நிலைதடுமாறி விழுந்ததால் இடது காலில் ஏற்பட்டதாக தெரிவித்தனர்.பின், தாலுகா போலீசார், 19ம் தேதி இரவு, திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.மேலும், அம்பேத்கர் அடிதடி, கொலை மிரட்டல் போன்ற வழக்குகளில் தொடர்புடைய சரித்திர பதிவேடு குற்றவாளி என, திருவள்ளூர் தாலுகா போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை