உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கொத்த கொல்லகுப்பத்தில் ஜன்னல் இடிந்த அரசு பள்ளி

கொத்த கொல்லகுப்பத்தில் ஜன்னல் இடிந்த அரசு பள்ளி

பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு ஒன்றியம், ராமாபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது கொத்தகொல்லகுப்பம் கிராமம். இந்த கிராமத்தில், பொதட்டூர்பேட்டை சாலையில் அரசு தொடக்க பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளியின் வடக்கு மற்றும் தெற்கில் நுழைவாயில்கள் அமைந்துள்ளன. இந்த பள்ளியில், 75 மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில், தெற்கு நுழைவாயிலை ஒட்டிய வகுப்பறையின் ஜன்னல் இடிந்து கிடக்கிறது. இந்த ஜன்னல் வழியாக வெளிநபர்கள் பள்ளி வளாகத்திற்குள் புகும் நிலை உள்ளது.மேலும், பள்ளியின் வடக்கில் அமைந்துள்ள பிரதான நுழைவாயிலை ஒட்டி, திறந்தநிலை கழிவுநீர் கால்வாய் பாய்கிறது. நுழைவாயில் பகுதியில் கட்டுமான பொருட்களும் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இந்த நுழைவாயிலை ஒட்டி, சுற்றுச்சுவரும் விரிசல் விட்டு இடிந்து விழும் நிலையில் கிடக்கிறது. இதனால், மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு கருதி, இடிந்து கிடக்கும் ஜன்னல் மற்றும் நுழைவாயில் பகுதியை சீரமைக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி