உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மாடு குறுக்கே வந்ததால் லாரி கவிழ்ந்து விபத்து

மாடு குறுக்கே வந்ததால் லாரி கவிழ்ந்து விபத்து

ஆர்.கே.பேட்டை:திருவள்ளூர் மாவட்டம், கவரைப்பேட்டையில் இருந்து பள்ளிப்பட்டு உணவு பாதுகாப்புக் கிடங்கிற்கு, அரிசி மூட்டைகளை ஏற்றியபடி லாரி வந்து கொண்டிருந்தது.கும்மிடிப்பூண்டி அடுத்த கோட்டக்கரை கிராமத்தைச் சேர்ந்த ஜோசப், 43, என்பவர் லாரியை ஓட்டி வந்தார். ஆர்.கே.பேட்டை அடுத்த கிருஷ்ணாகுப்பம் அருகே வந்தபோது, மாடு குறுக்கே வந்ததால், லாரியை திருப்பிய போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோரம் கவிழ்ந்தது.இதில், படுகாயமடைந்த ஓட்டுனர் ஜோசப், திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆர்.கே.பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி