உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பெருமாள்பட்டு பகுதியில் புதருக்குள் மாயமான சமுதாய கூடம்

பெருமாள்பட்டு பகுதியில் புதருக்குள் மாயமான சமுதாய கூடம்

பெருமாள்பட்டு: திருவள்ளூர் அடுத்துள்ளது பெருமாள்பட்டு ஊராட்சி. இங்குள்ள, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில், 1,000த்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிவாசிகளின் பயன்பாட்டிற்காக இப்பகுதியில், ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், சமுதாயக்கூடம் கட்டப்பட்டது. ஆனால் இந்த சமுதாயக் கூடம் முறையாக பயன்பாட்டிற்கு வராமல் பூட்டியே கிடந்தது.இதையடுத்து நாளடைவில் சமுதாயக் கூடத்தை சுற்றிலும் முட்புதர்கள் வளர்ந்து, சேதமடைந்து, தற்போது, 'குடி' மையமாகவும், சமூக விரோதிகளின் கூடாராமாகவும் மாறியுள்ளது. இதனால், பகுதிவாசிகள் தங்கள் இல்ல நிகழ்ச்சிகளுக்கான பதிவு செய்ய மண்டபங்களை கடந்த 10 ஆண்டுகளாக கடும் சிரமப்பட்டு வருவதோடு தனியார் திருமண மண்டபங்களை பயன்படுத்தி வருவதால் பொருள் மற்றும் நேர செலவு அதிகமாகி கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, பழுதடைந்த சமுதாயக் கூடத்தை சீரமைக்க வேண்டும் அல்லது புதிய சமுதாய கூடம் கட்ட ஒன்றிய நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை