பீர் கம்பெனியில் வேலை பார்த்த வாலிபர் திடீர் மாயம்
திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த குன்னத்துார் பள்ள காலனியைச் சேர்ந்தவர் சுப்ரமணி மகன் மணிகண்டன், 22. இவர், குத்தம்பாக்கத்தில் உள்ள தனியார் பீர் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். கடந்த, 20ம் தேதி காலை வெளியில் செல்வதாக கூறிச் சென்றவர் பின் வீடு திரும்பவில்லை. உறவினர் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தாய் கீதா கொடுத்த புகாரின் பேரில், மப்பேடு போலீசார் வழக்கு பதிந்து, காணாமல் போனவரை தேடி வருகின்றனர்.